News October 15, 2024
பயிர்களை பாதுகாக்க ஆட்சியர் தகவல்
திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில், விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும். அதிக அளவில் பயிரிடப்படும் வாழைப்பயிர்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News November 20, 2024
ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு அமைச்சர் கண்டனம்
திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
சாலை விபத்தில் ஒருவர் பலி
சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தத்தமங்கலத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், வடக்கு தெரு தளுதாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் அனந்த் என்பவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீடு செய்யும் முகாம்
திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டி, மடக்கு சக்கர நாற்காலி, செயற்கை அவயங்கள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் அளவீடு செய்து வழங்க உள்ளது. இதற்கான முகாம் 26ஆம் தேதி துறையூர் அரசு பள்ளியிலும், 27ஆம் தேதி திருவெறும்பூர் அரசு பள்ளியிலும், 28ஆம் தேதி லால்குடி அரசு பள்ளியிலும், 29ஆம் தேதி மணச்சநல்லூர் அரசு பள்ளியிலும் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்தார். ஷேர் செய்யவும்