News May 7, 2025
பயன்பாட்டில்லாத ஆழ்துளை கிணறுகள் ஆட்சியர் எச்சரிக்கை

புதுகை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு 15 நாட்கள் முன்பாக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை, பொது சுகாதாரம் துறையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். கிணற்றை சுற்றி இரும்பு தகட்டால் மூடவேண்டும், உரிமையாளர் முழு முகவரி இருத்தல் வேண்டும், பாதுகாப்பு தடுப்பு வேலி போட வேண்டும் என்றும் ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
புதுகை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

புதுகை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
புதுகை: மது போதையில் அட்டூழியம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் லெட்சுமி தியேட்டர் அருகே கருப்பையா (30) என்பவர் நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.
News December 5, 2025
புதுகை: கார் மோதி துடிதுடித்து பலி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த இளையாவயல் கிளை சாலையில் நேற்று அம்மாசி (65) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே காரை ஓட்டி வந்த சத்தியமூர்த்தி (25) என்பவர் மோதியதில் அம்மாசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சின்னத்தம்பி அளித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


