News April 5, 2025
பயன்படுத்திய பழைய நான்கு சக்கர வாகனம் ஏலம்

புதுக்கோட்டையில், உதவிஇயக்குநர் பயன்படுத்திய பழைய நான்கு சக்கர வாகனம் வரும் 15 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சி) அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 11, 12 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி இயக்குநர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தினை பார்வையிடலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2025
புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30 FIELD SALES EXECUTIVE பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 வயது முதல் 51 வயது வரை உள்ள ஆண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 – 25,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <
News April 9, 2025
புதுகையில் ரேசன் குறித்து குறைதீர் முகாம்

புதுக்கோட்டையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட குறை தீர்ப்பு முகாம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று குறைகள் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News April 9, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவலர் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 08.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.