News February 17, 2025
பயணிகளுக்கு திருச்சி ரயில்வே அறிவுரை

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அலுவலகம் பொதுமக்களின் நலன் கருதி சமீபத்தில் டெல்லியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி விபத்து மற்றும் பல்வேறு பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி இன்று (பிப்.17) முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில் பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதும், ஓடும் ரயிலில் இறங்குவதும் ஏறுவதும் கூடாது எனவும் விலை மதிக்க முடியாத உயிரை இழக்க வேண்டாம் என அறிவித்துள்ளது.
Similar News
News September 15, 2025
திருச்சி: திருமணம் நடக்க சிறப்பு வழிபாடு

லால்குடி அருகே அரியூரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வரும் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மாலையுடன் சென்று, இத்திருக்கல்யாண நிகழ்வில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். எனவே பக்தர்கள் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE!
News September 15, 2025
திருச்சி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருச்சி மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News September 15, 2025
திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து அறிக்கை வெளியீடு

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என கழகத் தொண்டர்களை வழிநடத்தி, இந்தியாவிலேயே முதல் மாநில கட்சியாக திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர் அண்ணா. திராவிடத்தின் அணையா விளக்கு பேரறிஞர் அண்ணாவை போற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.