News September 14, 2024
பந்த் போராட்டம் தேவையற்றது: அமைச்சர் பேட்டி

புதுவை சட்டப்பேரவையில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் லட்சுமி நாராயணன், கடந்த 2009ஆம் ஆண்டு மின் துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் படியே, ஆண்டுதோறும் மின் கட்டணம் உயா்த்தப்படுகிறது. புதுவை அரசு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே மின்சார மானியம் அறிவித்துள்ளது. எனவே, அரசியல் காழ்ப்புணா்ச்சியால் இந்தியா கூட்டணியினர் போராட்டத்தை அறிவித்திருப்பது தேவையற்றது என்று தெரிவித்தார்.
Similar News
News October 16, 2025
புதுச்சேரி: மனைவி கண்டித்ததால் தற்கொலை

தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் மனோகர் (48), மனைவி கிருஷ்ணகுமாரி இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மனோகருக்கு மதுபழக்கம் இருந்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் மனோகர் குடித்து விட்டு வந்ததை மனைவி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 16, 2025
புதுச்சேரி: குடிநீர் விநியோகம் நிறுத்தம்

வில்லியனூர் குடிநீர் பிரிவு பொறையூர் மேல்நிலை தொட்டியில் (17.10.2025) பணிகள் நடக்கிறது. அதனால் நாளை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பொறையூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் கோபாலன்கடை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் (18.10.2025) நண்பகலில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
News October 16, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..ரயில்வேயில் வேலை

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-5, OBC-3)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <