News September 28, 2024
பந்தலூர் மக்கள் போராட்டம் நடத்த முடிவு

பந்தலூர் அருகே சோலாடி பகுதியில், 300க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் 4 கி.மீ., தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி நடைபெறும் தருவாயில் வருவாய் துறை அதிகாரிகள் செக்சன்-17 என்று பணியை தடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கட்டுமான பணி தொடரவேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
Similar News
News October 23, 2025
நீலகிரி: நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

நீலகிரி, குன்னூரில் வரும் (அக்டோபர் 25) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் 17க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை கொண்டு முகாமிற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News October 22, 2025
உதகை புத்தக கண்காட்சி: கலை நிகழ்ச்சிகள் விவரம் அறிவிப்பு!

ஊட்டியில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நான்காவது புத்தக கண்காட்சி வரும் 24ஆம் தேதி முதல் அடுத்த மாதம் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முக்கிய சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள். பல்வேறு பதிப்பகங்கள் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளன. இந்நிலையில் கண்காட்சிகள் நடைபெறும் கலை குழுக்களின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
News October 22, 2025
நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கி தீவிரமாக உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக பல இடங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சில பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.