News March 5, 2025
பத்மநாபபுரம் மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு

பத்மநாபப்புரம் வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளின் குறை தீர்க்கும் முகாம் சப் கலெக்டர் தலைமையில் 18. ம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு பத்மனாபபுரம் உதவி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ளலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.* நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News December 12, 2025
குமரி: அழுகிய நிலையில் டிரைவர் சடலமாக மீட்பு

மணக்காவிளை வெள்ளைப் பாறையடி பகுதி டிரைவர் கிறிஸ்டோபர் (53). 8 மாதங்களுக்கு முன்பு இவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளுடன் இவரை விட்டு பிரிந்து சென்றார். வீட்டில் கிறிஸ்டோபர் தனியாக வசித்து வந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து (டிச.10)ம் தேதி இரவு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் தக்கலை போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு சென்று அழுகிய நிலையில் உடலை கைப்பற்றினர்.
News December 12, 2025
குமரி: பெண்குரலில் பேசி மோசடி; இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பார்த்திபன் தனியார் திருமண தகவல் நிலையத்தில் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்திருந்தார். அவரை குமரி மாவட்ட பெண் ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.17.50 லட்சம் முதலீடு செய்து நிறைய சம்பாதிக்கலாம் எனக் கூறி ஏமாற்றி உள்ளார். நேற்று அரியலூர் போலீசார் பெண் குரலில் பேசி பார்த்திபனை ஏமாற்றிய கல்குளம் அசார் (36) என்பவரை கைது செய்து செல்போன், சிம் பறிமுதல் செய்தனர்.
News December 11, 2025
குமரி மாவட்டத்தில் புதிதாக 212 வாக்குச்சாவடிகள் அமைப்பு

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 212 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மாவட்டத்தில் 1702 வாக்கு சாவடிகள் உள்ள நிலையில் 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனுடன் சேர்த்து மாவட்டத்தில் தற்போது 1914 வாக்குச்சாவடிகள் உள்ளன.


