News October 23, 2024
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு

இரும்புலிகுறிச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் லஞ்ச ஒழிப்பு ஏ டி எஸ் பி ராமச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சிறப்பு காவல் துணை ஆய்வாளர்கள் ரவி பவுன்ராஜ் உள்ளிட்டோர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத 5000 ரூபாயை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 8, 2025
அரியலூர்: முதியோர் இல்லங்களில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் ராஜாஜி நகர் மற்றும் கொல்லாபுரத்தில் உள்ள முதியோர் இல்லங்களை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், முதியோர்கள் பொழுது போக்குவதற்கான வசதிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்த ஆட்சியர், முதியோர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
News November 8, 2025
அரியலூர்: 12th போதும்.. வங்கி வேலை!

அரியலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
அரியலூரில் மாரத்தான் போட்டி

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியை எம்எல்ஏ-க்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் வயதின் அடிப்படையில் 17 முதல் 25 மற்றும் 25 க்கும் மேற்பட்ட என நான்கு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


