News March 23, 2024
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா

வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பொது தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி பெற வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு மாதங்களாக மாலை நேர சிற்றுண்டி வழங்கிய முன்னாள் மாணவர்கள் சேதுராமன், ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
Similar News
News April 10, 2025
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும்.விருப்பம் உடையவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2025
ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை <
News April 10, 2025
தி.மலை மக்களுக்கு தற்காலிக குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு குடிநீர் வரும் உலகளாப்பாடி பிரதான நீரேற்றும் குழாய் வரும் வழியில், தண்டராம்பட்டு அருகில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி பாலம் அமைக்கும் இடத்தில் நீரேற்றும் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி 09.04.2025 முதல் 14.04.2025 ஆகிய நாட்களுக்கு நடைபெற உள்ளதால், பெறப்படும் குடிநீர் அளவிற்கேற்ப குடிநீர் விநியோகத்தில் மாற்றம் இருக்கும்.