News March 28, 2024
பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளில் அணிவகுப்பு

திருப்பூர் மாநகர காவல் துறையின் KVR நகர் சரகத்தின் சார்பில் சரக காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கேவிஆர் நகர் காவல் நிலையம் முன்பு துவங்கிய கொடி அணி வகுப்பு செல்லம் நகர், பழ குடோன், கருவம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
Similar News
News November 22, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 22.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்
News November 22, 2025
திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா!

திருப்பூர் தாராபுரத்தில் மிகவும் பழமையாம காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன் துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம்.
News November 22, 2025
திருப்பூர் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <


