News December 6, 2024
பண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் வலை

பேரையூர் அருகே சாப்டூர் வி.அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(39). இவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால் பல லட்சம் ரூபாய் வெளிநாட்டு டிரஸ்ட் மூலமாக பெற்றுத் தருவோம் என பாலாஜி, மணிராஜா, செல்வம் ஆகியோர் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ரூ. 11 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின் 3 நபர்களும் தலைமறைவாகி விட்டனர். புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
மதுரை: சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு போக்சோ

திருப்பரங்குன்றம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் கார்த்திக் (27). இவர் 17 வயது சிறுமியை சோழவந்தான் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி 5 மாத கர்ப்பமானார். இதையறிந்த திருப்பரங்குன்றம் மகளிர் ஊர் நல அலுவலர் பத்மா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கார்த்திக் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
News November 27, 2025
மதுரை: கணவர் அடித்தால் CALL பண்ணுங்க!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 27, 2025
மதுரையில் மூச்சுத் திணறி இளம்பெண் பலி.!

மதுரை தெற்குவாசல் காஜா தெருவை சேர்ந்தவர்கருப்பசாமி மனைவி காவியா (20). இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


