News April 4, 2025
பண்ருட்டி பலாப்பழம், முந்திரிக்கு புவிசார் குறியீடு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பண்ருட்டி பகுதியில் உள்ள மண்வளம், தட்பவெப்ப நிலை ஆகிய காரணங்களால் பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கென தனி சுவை உண்டு. இத்துடன் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையை உங்க நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்!
Similar News
News November 1, 2025
கடலூர்: விபத்தில் பெண் பரிதாப பலி

பண்ருட்டி, மேல்குமாரமங்கலம் விஜயசங்கர் மனைவி ராஜஸ்ரீ (33). கடலூரில் உள்ள மருத்துவமனைக்கு ராஜஸ்ரீயை அவரது சகோதரர் ராஜா (42) ஆட்டோவில் (அக்.31) அழைத்து சென்றுள்ளார். அப்போது குடிதாங்கிசாவடி அருகே ஆட்டோ மீது எதிர் திசையில் வந்த சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 1, 2025
கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் (அக்டோபர் 31) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
கடலூரில் 2 உதவி ஆய்வாளர்கள் ஓய்வு

கடலூர் மாவட்டம், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி இன்று பணி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்கள் நமச்சிவாயம், பழனி ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினார்.


