News February 17, 2025
பண்ருட்டி எம்எல்ஏ இன்று காலை அறிக்கை வெளியீடு

பண்ருட்டி எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலும், வளங்களையும் கொள்ளையடித்து பல இலட்சம் கோடிகளை வாரி சுருட்டிச் சென்று விட்டு, தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மனச்சான்று இல்லாமல் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
போராட்டத்தில் ஈடுபட்ட 35 விவசாயிகள் மீது வழக்கு

கடலூர் அடுத்த கொடுக்கன்பாளையம், மலைஅடிகுப்பம் ஊராட்சியில் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் நேற்று தொடங்கினர். இந்நிலையில் இன்று (டிச.21) நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 35 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 21, 2025
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

கடலூர் மக்களே.. பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <
News December 21, 2025
விருத்தாசலத்தில் வந்தே பாரத் நின்று செல்ல அனுமதி

சென்னை- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் இனி விருத்தாசலத்தில் நின்று செல்லும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார். தொழில் மற்றும் பணி நிமித்தமாக, விரைவான பயணத்தை மேற்கொள்ள வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல வேண்டுமென்ற விருத்தாசலம் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று ரயில்வே அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


