News April 8, 2025
பண்ருட்டி அருகே பதுக்கப்பட்ட ரேசன் பொருட்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை முறைகேடாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் பண்ருட்டியில் உள்ள ஒரு வீட்டில் 1,200 கிலோ அரிசி, 170 கிலோ துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 21, 2025
கடலூர்: ரயில்வேயில் 5800 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5810 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. அரசு வேலை தேடுவோருக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News November 21, 2025
கடலூர்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு!

கடலூர் மக்களே, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 9444123456 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 21, 2025
கடலூர் மாவட்டத்தில் 10.90 மி.மீ மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவம்பர் 21) காலை 8.30 மணி நிலவரப்படி, சிதம்பரம் 3 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 3 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 3 மில்லி மீட்டர், லால்பேட்டை 1 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 0.2 மில்லி மீட்டர், கடலூர் 0.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 10.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


