News April 25, 2025
பணிக்கு சென்ற வன ஊழியர் உயிரிழப்பு

கூடலூர், ஓவேலி பகுதியில் வரையாடு கணக்கெடுப்பு பணிக்கு சென்ற வனக்காப்பாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. ஓவேலி வனச்சரகத்திற்கு சென்ற உட்பட்ட டெரஸ் பகுதியில் வனக்காப்பாளர் மணிகண்டன் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் முகாமிலேயே தங்கி உள்ளார். வன ஊழியர்கள் திரும்பி வந்து பார்த்த பொழுது இறந்த கிடப்பது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
நீலகிரி: அதிமுக கவுன்சிலர் மகன் தற்கொலை வழக்கில் திருப்பம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உடற்பயிற்சி நிலையத்தில் அதிக ஊக்க மருந்து எடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர் குருமூர்த்தியின் மகன் ராஜேஷ் கண்ணா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை, தூண்டுதல் வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர். உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் சிவகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 17, 2025
நீலகிரியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிங்கர் போஸ்டில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் ( 19.09.2025) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
உதகை மாரியம்மன் கோயிலில் மோடி பெயரில் சிறப்பு பூஜை

உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு நகர பாஜக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் உதகை நகர தலைவர் ரித்து கார்திக், மாவட்ட முன்னாள் தலைவர் மோகன்ராஜ் , மாவட்ட பொருளாதார அணி தலைவர் நித்தின் சந்திர சேகர், மாவட்ட துணை தலைவர் அருண், நகர துணை தலைவர்கள் சுதாகர் மஞ்சுநாத், பட்டாபிராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.