News April 5, 2025

பணம் இரட்டிப்பு மோசடி: போலீசார் எச்சரிக்கை!

image

சேலம் அம்மாப்பேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், பொது மக்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டு 4 பேர் கைதான நிலையில், பணம் கட்டியவர்களுக்கு திருப்பி தருவதாக வாட்ஸப் மூலம் ஏஜெண்டுக்கள் பரப்பி வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், இது குற்றவாளிகளுக்கு சாதகமாக திருப்ப செய்யும் சூழ்ச்சி எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Similar News

News December 5, 2025

சேலம் மக்களே! இந்த App மூலம் புகாரளிக்கலாம்!

image

சேலம்: உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால், அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைக மற்றும் புகார்களை மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE<<>> என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். இதை SHARE செய்யுங்கள்!

News December 5, 2025

சேலம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 5, 2025

சேலத்தில் கல்லை போட்டு கொல்ல முயற்சி: 5 பேருக்கு காப்பு!

image

சேலம்: அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி அருகே கக்கன் காலனியை சேர்ந்த மேள தொழிலாளியான ஜெயகாந்த் (23) என்பவரை கடந்த, 1 இரவு, 6 பேர் கொண்ட கும்பல் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்றனர். இந்த வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை காரிப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து மின்னாம்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் (19), கூட்டாத்துப்பட்டி அருள்பிரகாஷ் (19) ஆகியோர நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!