News March 27, 2025
பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News July 11, 2025
ஆன்லைன் மோசடி – முதலில் என்ன செய்ய வேண்டும்?

நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு 1907 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் இணைய மோசடிக்கு ஆளாகியுள்ளீர்கள் என்பதை உணர்ந்தவுடன், உடனடியாக உங்கள் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்கை பிளாக் செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 அழைக்கலாம். மக்களே SHARE பண்ணுங்க!
News July 11, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல், பழனி வழியாக தினசரி இயங்கும் 22651 சென்னை சென்ட்ரல் – பாலக்காடு அதிவிரைவு ரயில், இன்று (11.07.2025) முதல் 15 நிமிடங்கள் முன்னதாக பாலக்காடு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி சென்னையில் இரவு 9:40 மணிக்கு புறப்படும் ரயில் திருவள்ளூர், ஜோலார்பேட்டை, சேலம், இராசிபுரம் வழியாக அதிகாலை 3:34 மணிக்கு நாமக்கல் வந்து அதிகாலை 3:35 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. SHARE பண்ணுங்க!
News July 11, 2025
நாமக்கல்லில் இரவு நேர ரோந்து காவலர் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 10) நாமக்கல் – யுவராஜன் (9498177803 ), ராசிபுரம் – சுகவானம் ( 9498174815), திருச்செங்கோடு – வளர்மதி ( 8825405987), வேலூர் – கெங்காதரன் ( 6380673283) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!