News March 29, 2025
பணத்திற்கு பதில் பேப்பர் கட்டு; ரூ.5 லட்சம் மோசடி…!

ஆந்திரா மாநிலம் சித்தூர் சேர்ந்தவர் ஹனிஃபா. இவர் டெய்லரிங் ஸ்பேர் பார்ட்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள், ஆசை வார்த்தைகளைக் கூறி ராணிப்பேட்டைக்கு வரவைத்து வெளிநாட்டு பணம் கொடுப்பதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்து தப்பி சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.
Similar News
News November 22, 2025
ராணிப்பேட்டையில் வேலை வாய்ப்பு முகாம்!

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர்.6ஆம் தேதி கலவையில் உள்ள ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து முன் பதிவு செய்யலாம்.
News November 22, 2025
ராணிப்பேட்டை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

ராணிப்பேட்டை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
ராணிப்பேட்டை: குழந்தை பாக்கியம் அருளும் முருகர் கோயில்!

ராணிப்பேட்டை, திருமணிக்குன்றம் அருகே உள்ள ரத்னகிரி பாலமுருகன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற மலைக்கோயில் ஆகும். இந்த கோயில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இத்தலத்தில் முருகன் நான்கு கைகளுடன் கையில் ஆயுதம் ஏந்தியபடி பக்தர்களுக்கு காட்சித்தருகிறார். இந்த கோயிலில் விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை சுற்றி வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.


