News April 7, 2025
பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை குபேரபுரீஸ்வரர் கோயில்

தஞ்சை வெண்ணாற்றின் தெற்கு கரையோரம் அமைந்துள்ளது இந்த தஞ்சபுரீஸ்வரர் கோயில். குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள இறைவன் குபேரபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தீபாவளி திருநாளிலும், பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என கூறப்படுகிறது. இதை SHARE செய்யவும்
Similar News
News December 10, 2025
தஞ்சாவூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு?

தஞ்சையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
தஞ்சாவூரில் நாளை மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் துணை மின் நிலையத்தில் நாளை(டிச.11) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அம்மிநிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் தாமரன்கோட்டை மதுக்கூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
தஞ்சாவூர்: போலீஸ் என கூறி ரூ.44 லட்சம் கொள்ளை

மன்னார்குடியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கார்த்திக்கின் என்பவரின் சகோதரர் அர்ஜுன், பணியாளர் பிரதீபன் ஆகியோர் தஞ்சையில் இருந்து ரூ.44 லட்சத்தை பெற்றுக்கொண்டு, ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, வாண்டையார் இருப்பு பேருந்து நிறுத்தம் அருகே மர்ம நபர் ஒருவர் தன்னை குற்றப்பிரிவு காவலர் என கூறி, அவர்களிடமிருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


