News May 6, 2024
பட்டுக்கோட்டை: முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவி அபினேஸ்ரீ 580/600 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர் 3 பாடங்களில் 100/100 மதிப்பெண் எடுத்துள்ளார். 2ம் இடமாக மாணவி நிஃப்ரின் 573, 3ம் இடமாக மாணவி ரிபாயா 568 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பிடித்த மாணவியை ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
கடன் பிரச்சனை தீர்க்கும் வைரவர்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ளது அருள்மிகு வைரவன் திருக்கோயில். வேண்டியது நினைத்து சாமிக்கு வஸ்திரம், சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்தால் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். இங்கு வேண்டினால் கர்மவினைகள் தீர்ந்து விடும், கடன் பிரச்சனை, திருமண தடைகள் விலகும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் வைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
தஞ்சாவூரில் வேலை வாய்ப்பு

தஞ்சாவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Customer Care Executive) வேலைக்கான 40 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News April 20, 2025
இன்று முதல் முன்பதிவு செய்யலாம்

தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம் கிராமத்தில் வருகின்ற 23ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனை முன்ன்னிட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்ய https://thanjavur.nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 10 மணி முதல் 22 ஆம் தேதி காலை 10 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.