News May 16, 2024

பட்டுக்கோட்டையில் 16 செ.மீ மழை

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

Similar News

News November 19, 2025

தஞ்சை: மீண்டும் மழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 19, 2025

தஞ்சை அருகே கல்லூரி மாணவர் பரிதாப பலி!

image

தஞ்சையை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (20). திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு டீக்கடைக்கு சென்றார். ஆர்.எம்.எஸ். காலனி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரவீன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றது

News November 19, 2025

தஞ்சை: இரவு ரோந்து காவலர்கள் நியமனம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில், (நவ. 18) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!