News February 16, 2025
பட்டியலின மாணவியை காலில் விழ வைத்த கொடூரம்

கோவில்பட்டி DHYAN HEALTH EDUCATION என்ற நிறுவனத்தில் தென்காசி, நாயினாம்பட்டியை சேர்ந்த மாலா வினோதினி(பட்டியலினம்) படித்து வருகிறார். இவருக்கு சக மாணவியுடன் ஏற்பட்ட தகராறில், கல்வி நிறுவன கண்காணிப்பாளர் கிருஷ்ணாபிரியா, மாலா வினோதினியை சக மாணவியின் காலில் விழ வைத்து, அடித்து துன்புறுத்தியுள்ளார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் கிருஷ்ணாபிரியா மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குபதிந்துள்ளனர்.
Similar News
News December 3, 2025
தென்காசி: சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்

கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் கடந்த 2019ல் மிட்டாய் வாங்க ரூ.10 தருவதாகக் கூறி பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி நேற்று விசாரித்து சண்முகநாதனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News December 3, 2025
தோரணமலை முருகன் கோயிலில் நாளை கிரிவலம்

கடையம் அருகே அமைந்துள்ள தேரையர், சித்தர், அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன் கோயில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை காலை 6 மணி முதல் நடைபெறும். இந்த 6 கிலோ மீட்டர் சுற்றளவில் கிரிவலப்பாதையை வலம் வருவதற்கு சுமார் 1.15 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலையும், மதியமும் அன்னதானம் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க…
News December 2, 2025
குழந்தை தொழிலாளர் பணி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம், 1986-ன் படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும், 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது. அவ்வாறு பணி அமர்த்திய வேலையளிப்பவருக்கு ரூ.50,000/- வரை அபராதமும், 6 மாதங்கள் முதல் 2 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.


