News April 2, 2025
பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உடையாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் பட்டா மாற்ற ரூ.5,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.தனியார் விடுதியில் வைத்து லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
விழுப்புரத்தில் தாய் திட்டியதால் மகளுக்கு நேர்ந்த விபரீதம்!

விழுப்புரம் கணபதி நகரைச் சேர்ந்த ஷபி மகள் ரஷிதாபேகம் ரஷிதா பேகத்துக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்படுமாம். இதற்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் டிச. 2-ஆம் தேதி வீட்டில் வேலை செய்யாமல் ரஷிதா இருந்த நிலையில் தாய் திட்டியதால் வலிப்பு நோய் மாத்திரை அதிகமாக உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.விழுப்புரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
News December 6, 2025
விழுப்புரத்தில் அதிகாரி வீட்டில் நகை திருட்டு !

விழுப்புரத்தில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் வீட்டில் 2 பவுன் நகைகள்,ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.சிவசக்தி நகரைச் சேர்ந்த செந்தில்குமார்.இவர் இரவு தூங்கி எழுந்து பார்த்தபோதுகீழ் தளத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து திருடு போயிருப்பதுதெரிய வந்தது. விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 5, 2025
விழுப்புரம் முழுவதும் போலீசார் திடீர் சோதனை!

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் & விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில் இன்று (டிச.5) மறைமுக நாசவேலை தடுப்பு பிரிவினர், காவலர்கள் & மோப்பநாய் ராணி உதவியுடன். பின் பொதுமக்கள் அதிகம் போடக்கூடிய இடங்கள், நகர்ப்புற முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இது நாளை டிச.6(பாபர் மசூதி விவகாரம்) தினத்தை முன்னிட்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.


