News April 25, 2025
பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <
Similar News
News November 15, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், (நவ.14) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
மயிலாடுதுறையில் சாராயம் கடத்திய நபர் கைது

மயிலாடுதுறை அருகே மாப்படுகை பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் இருந்து, ஜான் பீட்டர் மற்றும் லூகாஸ் ஆகியோர் பாண்டி சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதில் ஜான் பீட்டரை கைது செய்து அவரிடமிருந்து 500 எண்ணிக்கையிலான பாண்டி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லூக்காஸை தேடி வருகின்றனர்.
News November 14, 2025
விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீ காந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி, உதவி திட்ட அலுவலர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


