News August 16, 2024
பட்டாபிராமில் இரண்டு நாட்கள் இலவச புத்தக கண்காட்சி!

பட்டாபிராம் வசந்தம் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் ஞாயிறு இரவு 8 மணி வரை இரண்டு நாட்கள் இலவச புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள் அரங்கம், கல்வி அரங்கம், மூடநம்பிக்கை, அறிவியல் அரங்கம், வினாடி வினா அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பட்டாபிராம் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
Similar News
News November 28, 2025
திருவள்ளூர்: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 43 வயதுள்ள ரயில்வே ஊழியருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதனால், மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், 7ஆம் வகுப்பு படிக்கும் தனது சொந்த மகளுக்கே அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அவருக்கு 17 ஆண்டுகள் சிறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, சிறுமிக்கு ரூ.3 லட்சம் அரசு நிவாரணம் வழங்க திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் பரிந்துரைத்தது.
News November 28, 2025
திருவள்ளூர்: பல லட்ச ரூபாய் பண மோசடி!

திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டி உரிமையாளரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் பார்வதி, அவரது கணவர் மீது நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பார்வதி தலைமறைவான நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது பெங்களூருவில் செல்போன் சிக்னல் காட்டியதால் தனிப்படை அங்கு விரைந்தது. ஆனால், இது திசை திருப்பும் வேலையாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
News November 28, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று நவ.27 இரவு ரோந்து முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


