News April 29, 2025
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி ஸ்டான்டர்டு பட்டாசு ஆலையில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில் 100% தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.புதுப்பட்டியை சேர்ந்த பாக்கியலட்சுமி 58, என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News November 19, 2025
அருப்புக்கோட்டையில் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

அருப்புக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்மார்ட் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் இன்று (நவ.19) நகராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
விருதுநகர்: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

விருதுநகர் மக்களே, ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 முதல் 33 வயதுகுட்பட்டவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளைக்குள் (நவ. 20) <
News November 19, 2025
விருதுநகர்: 15 பேரை கடித்த தெரு நாய்கள்

காரியாபட்டி ஆவியூரில் நவ.17-ல் 3 தெருநாய்கள் கடித்ததில் மணிகண்டன், தங்கப்பாண்டி, தனலட்சுமி, ஆறுமுக கணபதி, கருப்பையா என 15 பேர் பலத்த காயம் அடைந்து விருதுநகர் GH-ல் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, நேற்று ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வெறி பிடித்த 58 நாய்களை பிடித்தது நாய்கள் காப்பகத்தில் விட்டது. மேலும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


