News August 14, 2024
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி அருகே, மாயத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் ஜெயந்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று(ஆக.,14) காலை சுமார் 10 மணி அளவில் அந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து வருகின்றனர். காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
Similar News
News December 20, 2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

விசைத்தறிகள் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறிவுகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்தவும், புதிய நாடாயில்லா ரேபியர் தறிகளை கொள்முதல் செய்திடவும் மூலதன மானியங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் http://tnhandlooms.tn.gov.in/pms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

News December 19, 2025
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலைகள் சாற்றி வழிபாடு

அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பட்டாபிராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில் சன்னதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலைகள் சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.