News October 23, 2024

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் நெல்லை வருகை

image

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா வருகிற 26 ஆம் தேதி சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பட்டம் அளிக்க உள்ளார். இதற்காக அவர் நெல்லைக்கு வருகை தர உள்ளார். விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 19, 2025

நெல்லை: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

image

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள்<> இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 19, 2025

நெல்லை: பெண் போலீஸ் மீது தாக்குதல்.. மாமியார் கைது

image

தச்சநல்லுார் போலீசில் சிறப்பு எஸ்.ஐயாக இருப்பவர் முருகானந்தம். இவரது மனைவி சந்தா. இவர்களது மகன் ஹபீஸ் (28) என்பவரும், பெண் போலீசும் காதல் திருமணம் செய்துள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக திருச்சியில் இருந்த பெண் போலீஸ், அண்மையில் பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சாந்தா, பெண் போலீசை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் சந்தா கைது செய்யப்பட்டார்.

News December 19, 2025

நெல்லை: இணையத்தில் தீயாய் பரவும் செய்தி.. நம்பாதீங்க!

image

வாட்ஸ் ஆப் மற்றும் அரட்டை தளங்களில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும். 2025 ஆண்டு முடிவடைய உள்ளதால் இந்த உதவி தொகைக்கு விண்ணப்பிக்க லிங்கை தொடர்ந்து பதிவு செய்யவும் என்று செய்தி பரவி வருகிறது. இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களது புகைப்படங்கள் கைப்பேசியில் உள்ள மற்ற தரவுகளைத் திருட வாய்ப்புள்ளதாகவும் அதனை வைத்து உங்களை மிரட்டவும் செய்வார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. SHARE

error: Content is protected !!