News August 15, 2024
பட்டகத்தியுடன் சுற்றித் திரிந்த குற்றவாளி கைது

சென்னை திருமங்கலம் அருகே பட்டகத்தியுடன் சுற்றித் திரிந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். சரித்திர குற்றப்பதிவேடு குற்றவாளியான மணிரத்தினம், கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இவர் தனது கூட்டாளி சுனில் குமார் உடன் திருமங்கலம் சாலையோரம் அருகே பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்தபோது, போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
சென்னை: இளைஞருக்கு தலையில் வெட்டு; தந்தை, மகன் கைது

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அஜய்(22). நேற்று முன்தினம் இரவு, அஜய் குடிபோதையில் இருக்கும் போது, மது வாங்கி தருவதாக கூறி, சாமுவேல் என்பவர் அழைத்து சென்றுள்ளார். அப்போது அஜய் – சாமுவேல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அஜயை அரிவாளால் வெட்டியுள்ளார். அவருடன் சேர்ந்து சாமுவேல் தந்தையும் தாக்கியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஜய் அளித்த புகாரின்பேரில் தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
News December 9, 2025
சென்னை: ஸ்கேன் எடுக்க சென்றவரிடம் பாலியல் அத்துமீறல்

சென்னை கொளத்தூரில் தனியார் ஸ்கேன்ஸ் லேபில் கில் கவின் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக கடந்த டிச.5ஆம் தேதி, ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட் பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று (டிச.8) கில் கவின் என்பவரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
S.A.சந்திரசேகரை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள்

சென்னை எம்.ஆர்.சி நகரில் காங்கிரஸ் குழுவினர் இன்று த.வெ.க தலைவர் விஜய்யின் தந்தை S.A.சந்திரசேகரை நேரில் சந்தித்தனர். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். கடந்த சில மாதங்களாக த.வெ.க., காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.


