News November 5, 2024
படிப்பை தொடர அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற திங்கள் தினக் குறை தீர்ப்பு கூட்டத்தில் திம்பாம்பேட்டையை சேர்ந்த மலர் என்ற பெண் கணவர் இறந்துவிட்டதால் தனது 2 குழந்தைகளின் கவ்வி பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாக மனு அளித்தார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவரது மகன் மற்றும் மகளை விடுதியில் சேர்த்து படிப்பை தொடர அறிவுறுத்தினார். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News November 19, 2024
ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் 2/2
திருப்பத்தூர் நகரம், கிராமிய காவல் நிலையங்கள் மற்றும் நாட்றம்பள்ளி, அம்பளுர், வாணியம்பாடி, ஆம்பூர், உமராபாத் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இன்று (19.11.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News November 19, 2024
இன்றைய ரோந்து பணி காவலர்களின் விவரம் 2/2
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி, அம்பலூர், வாணியம்பாடி, ஆம்பூர், காவலூர், உமராபாத் உள்ளிட்ட காவல்நிலையங்களில் இன்று (19.08.2024) ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களை அழைத்து காவலர்களுக்கு தகவல் அளிக்கலாம்.
News November 19, 2024
பெரிய கண்ணாலம்பட்டி பள்ளியில் கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் அடுத்த பெரிய கண்ணாலப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் நூலகம், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் மதிய உணவின் தரம் குறித்து இன்று (நவ.19) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.