News October 24, 2024
பஞ்சாப் மாநிலத்தில் நெமிலி விவசாயிக்கு பயிற்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி அமலன் அவர்கள் நெமிலி வட்டாரத்தில் உள்ள கீழ்வெண்பாக்கம் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்டு பஞ்சாப் மாநிலத்திற்கு விவசாய சம்பந்தப்பட்ட பயிற்சிக்கு சென்றுள்ளார். இதர மாவட்டங்களிலும் ஒருவர் சென்றுள்ளனர் என அருணா குமாரி ADA தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி விவரங்கள்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் 18.9.25 இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
News September 18, 2025
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வீசி மோட்டூர் ஊராட்சியில் வி.பி.ஆர்.சி கட்டடத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு, உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளின் மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன்,ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தி,வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News September 18, 2025
ராணிப்பேட்டை: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க…