News April 14, 2025

பச்சிளம் ஆண் குழந்தை சடலம்; தாய் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது நிலத்தில் நேற்று டிராக்டரில் உழவு செய்தபோது, பச்சிளம் ஆண் குழந்தை சடலம் வெளியானது. இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் விசாரித்தனர். அதில், அந்த நிலத்தின் அருகே வசிக்கும் மேகலா(39) என்பவருக்கு கடந்த 10ம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தை இறந்து பிறந்ததும், அதை விவசாய நிலத்தில் புதைத்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 16, 2025

பள்ளியில் கேமரா, கணினி பாகங்கள் திருட்டு

image

செங்கம் அருகே காயம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி 3 நாட்கள் விடுமுறைக்குப் பின் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது பள்ளியின் ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, கண்காணிப்புக் கேமரா மற்றும் கணினி உதிரி பாகங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் ரகுபதி புகார் அளித்ததையடுத்து, செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி பயிலும் இடத்திலும் கைவரிசையா? 

News April 16, 2025

இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது

image

காஞ்சிபுரம், உத்திரமேரூரை சேர்ந்த பாலாஜி என்பவர், ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் செய்யாறைச் சேர்ந்த பெண் பணிபுரிந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பாலாஜிக்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த அந்த பெண் காதலை கைவிட்டுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை பாலாஜி நிறுத்திய நிலையில், பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!