News March 26, 2025
பங்குனி பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நிரல்

அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஏப்.8 அன்று பங்குனி பொங்கல் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்.15 பொங்கல் விழாவும், ஏப்.16 அக்னி சட்டி, பூக்குழி விழாவும், ஏப்.17 திருத்தேர் மற்றும் ஏப்.18 பூ பல்லாக்கு நிகழ்வும் நடைபெற உள்ளது.
Similar News
News January 3, 2026
விருதுநகர்: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

விருதுநகர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

விருதுநகர் வருவாய் கோட்டங்களில் வரும் ஜனவரி 13-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் வருவாய் கோட்டங்களான சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய பகுதிகளில் சப் கலெக்டர் ஆர்டிஓ அலுவலகங்களில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
விருதுநகர்: இயற்கை உபாதைக்கு சென்ற இடத்தில் பரிதாப பலி

விருதுநகர் அல்லம்பட்டி ராஜ்குமார் 30, இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு சாவித்திரி 23, என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் கிடையாது. இன்று அதிகாலை 5:30 மணிக்கு ரயில்வே தண்டவாளம் அருகே இயற்கை உபாதைக்காக சென்றவர், தண்டவாளத்தை கடக்கும் போது மும்பை எக்ஸ்பிரசில் அடிபட்டு இறந்துள்ளார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


