News April 21, 2025
பக்ரைன் நாட்டில் உயிரிழந்த இராம்நாடு மீனவர்

பாம்பன் காமராஜர் நகரை சேர்ந்த சீமோசன்(33) என்பவர் மீன்பிடி தொழிலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்ரைன் நாட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு செல்சியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊர் கொண்டுவர அவரது மனைவி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 25, 2025
ராநாதபுரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

ராமநாதபுரம் மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News November 25, 2025
ராமநாதபுரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 25, 2025
ராமநாதபுரம் அருகே கடல் அலை சுழலில் சிக்கியவர் மாயம்

நம்புதாளையை சேர்ந்தவர் முத்துராக்கு 50. மீனவரான இவருக்கு சொந்தமான நாட்டு பைபர் படகை பாதுகாக்கும் வகையில் நங்கூரம் இட்டு நிறுத்துவதற்காக அதே கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் 30, ஆகாஷ் 20, தொண்டீஸ்வரன் 18, ஆகிய மூவரும் கடலுக்குள் சென்றனர். அப்போது சிக்கியதால் தொண்டீஸ்வரனை அலை சுழல் இழுத்துச் சென்றது. போலீசார் உள்ளிட்ட பலரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.


