News March 25, 2025
பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சிக்கான விண்ணப்பம் வருகிற 13ஆம் தேதி வரை பயிற்சி நிலையத்தில் ரூ.118 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விவரங்களுக்கு நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் கூட்டுறவு மேலாண் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 11, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.11) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News December 11, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று டிசம்பர்-11ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக இதே விலை நீடித்து வருகிறது.
News December 11, 2025
நாமக்கல்: B.Sc, B.E, B.Tech, B.Com படித்தவரா நீங்கள்?

நாமக்கல் மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025,
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க.


