News December 4, 2024
பகவதி அம்மன் கோவில் இடம் விவகாரம்; உயர்நீத மன்றம் அதிரடி

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 45 சென்டு இடத்தை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்து அறநிலையத்துறை கன்னியாகுமரி பேரூராட்சியிடம் ஒப்படைத்தது. இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் கோயிலுக்கு சொந்தமான இடம் பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்கு மதுரை உயர்நீதி மன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது.
Similar News
News November 28, 2025
குமரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News November 28, 2025
குமரி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கரும்பாட்டூரை சேர்ந்தவர் கண்ணன் (42) தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மது குடித்துவிட்டு வீட்டின் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். கண்ணன் மது குடிப்பதை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதனால் கண்ணன் விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டார். தென் தாமரைகுளம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
News November 28, 2025
குமரி: உங்கள் வழக்குகளை முடிக்க சூப்பர் வாய்ப்பு!

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் டிசம்பர் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை மற்றும் பூதப்பாண்டி நீதிமன்ற வளாகத்திலும் மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற உள்ளது.


