News March 26, 2025

பகவதி அம்மன் கோயிலில் ரூ.26 லட்சம் உண்டியல் வசூல்

image

குமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையாளர் தங்கம், மேலாளர் ஆனந்த், ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் நேற்று(மார்ச்.25) திறந்து எண்ணப்பட்டன. இதில் வருமானமாக ரூ.26 லட்சத்து 46 ஆயிரத்து 153 வசூலாகியிருந்ததாக தகவல். இது தவிர 4.5 கிராம் தங்கம், 32.950 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணங்களும் இருந்தன.

Similar News

News April 19, 2025

நாகர்கோவில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு 

image

நாகர்கோவில் நெல்லை ரயில் பாதையில் மறுகால் குறிச்சி தண்டவாளப்பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் காயங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது, தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 18, 2025

குலசையில் 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன

image

இஸ்ரோ தலைவர் நாராயணம் இன்று நாகர்கோவில் வந்தார். அவரை இஸ்ரோ விஞ்ஞானிகள் வரவேற்றனர். பின்னர் அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கான 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என்று கூறினார்.

News April 18, 2025

நாகர்கோவிலில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

நாகர்கோவிலில் உள்ள சாப்டுவேர் நிறுவனத்தில் Analyst – Research பிரிவில் 50 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதில் இளங்கலைப் பொறியியல் படித்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலா. மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும் நிலையில் விண்ணப்பிக்க விருப்புவர்கள் இங்கே<> கிளிக் <<>>செய்து ஏப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!