News April 27, 2025

நோய் ஏற்படாமல் காக்கும் பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன்

image

நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கென தனிசன்னதி அமைந்துள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் வேர் ஒன்றை உடம்பில் கட்டிக்கொண்டால் நோய்கள் ஏதும் நெருங்காது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. SHARE!

Similar News

News April 28, 2025

திருவாரூரில் வருகிற 1ம் தேதி கிராம சபை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில், தொழிலாளர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்,ஆகிய இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்த பொதுமக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் மோகனசந்தரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

News April 28, 2025

திருவாரூர்: மின்தடை புகார்களுக்கான எண்

image

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை புகார்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக முகவரி: 73, C – துர்கலையா ரோடு , திருவாரூர் -610001; மின்னஞ்சல் : setrvr@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 04366244099. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News April 28, 2025

திருவாரூர்: காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

image

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி(46) என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண், கடந்த 23ம் தேதி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து கணவர் ரமேஷ் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கஸ்தூரி அரைகுறை ஆடையுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!