News December 5, 2024
நொய்யல் பகுதியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

நொய்யல், காளிபாளையம், குளத்துப்பாளையம், வேட்டை மங்கலம், குந்தாணி பாளையம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் இன்று பூக்களை ஏலம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். இதில் குண்டுமல்லி கிலோ ரூ.1600க்கும், சம்பங்கி பூ ரூ.160க்கும், அரளிப்பூ ரூ.300க்கும், ரோஜாப்பூ ரூ.220க்கும், முல்லைப்பூ ரூ.1100க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News November 21, 2025
கரூர்: கட்டிலில் இருந்து கீழே விழுந்து சாவு

கரூர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கம்பவுண்டர் பழனிசாமி (64), நேற்று முன்தினம் இரவு படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
News November 21, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. வீடுகளுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய வசதியாக, நாளை மற்றும் நாளை மறுநாள்ஆகிய 2 தினங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு சேவை மையங்கள் செயல்படும். இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர் தங்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 21, 2025
கரூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

கரூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க.அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


