News April 7, 2025
நேர்த்தி கடன் செலுத்த வினோத உடை

கமுதி, செங்கப்படை கிராமத்தின் காவல் தெய்வமான அழகு வள்ளியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவில் சாக்குகளை பேண்ட் & சட்டை வடிவில் அணிந்து கொண்டு முகத்தையும் மூடிய படி ஊர்வலத்தில் கலந்து கொள்வர். முளைப்பாரி ஊர்வலம் புறப்பட்டபோது கும்மி மேள தாளங்களுடன் சாக்கு ஆடை அணிந்த பக்தர்களும் நடனம் ஆடி செல்வர். இதனை கிராம மக்கள் நேர்த்திகடனாக செலுத்தி வருகின்றனர். *ஷேர்
Similar News
News April 26, 2025
இராமநாதபுரம்: எஸ்.ஐ போட்டி தேர்வு இலவச பயிற்சி மையம்

இராமநாதபுரத்தில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் எஸ்.ஐ போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரில் சென்று அல்லது 7339406320 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு. *SHARE* பண்ணுங்க
News April 26, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 187 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ளது, பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay – ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்படும். இதற்கு 21 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணபிக்கலாம். விண்ணபிக்க இன்றே கடைசி நாள் (ஏப்ரல்.26) <
News April 26, 2025
முதியவரை கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

துரைப்பாண்டி(60), முத்துக்குமார்(60) இருவரும் கொரோனா காலத்தில் ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் யாசகம் வாங்கி வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2022ல், காசை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் துரைப்பாண்டி, பீர் பாட்டிலால் தாக்கியதில் முத்துக்குமார் உயிரிழந்தார். துரைப்பாண்டிக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.