News August 16, 2024
நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

கரூரைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் முடித்து இன்று மாலை ஊர் திரும்பினர். மண்டபம் முகாம் பூந்தோன்றி காளி அம்மன் கோயில் அருகே சென்றபோது பெங்களூரிலிருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 10 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
ராம்நாடு: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 20, 2025
ராம்நாடு: ரூ.40 லட்சம்.. கடல் அட்டைகள் கடத்தல்?

கீழக்கரை புது கிழக்கு தெரு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்ததாக கீழக்கரை போலீசார் வனத்துறையினரிடம் இணைந்து மொட்டை மாடியில் சோதனை நடத்தினர். அப்போது பதப்படுத்தப்பட்ட 400 கிலோ கடல் அட்டைகள் 13 மூட்டைகளில் இருந்தன. இதன் மதிப்பு ரூ.40 லட்சம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கடல் அட்டைகள் கீழக்கரை வனச்சரகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
News November 20, 2025
ராம்நாடு: சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

ராமநாதபுரம் மக்களே, மாவட்ட வேலைவாய்ப்பு மையம் நடத்தும் மாதாந்திர <


