News January 23, 2025
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருவிளையாட்டத்தில் உள்ள நுகர்வோர் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று நெல் கொள்முதல் செய்யும் நெல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் மாவட்ட ஆட்சியர் பூம்புகார் எம்.எல்.ஏ உடன் இருந்தனர் .
Similar News
News July 6, 2025
மயிலாடுதுறை அருகே வாலிபருக்கு நன்னடத்தை சான்றிதழ்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கள்ளிக்காட்டை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் என்பவர் காதல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் விக்னேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் நீதிமன்ற ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்த விக்னேஷ் மீது எஸ்பி அறிவுறுத்தலின்பேரில் நிர்வாக நடுவர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் முன்னிலையில் நன்னடத்தை சான்றிதழ் பிறப்பிக்கப்பட்டது.
News July 5, 2025
ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

வேளாண்மை துறை மூலம் ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். துவரை தட்டை பயறு வகை விதைகள் 1500 பேருக்கும் தக்காளி, கத்திரி, உள்ளிட்ட காய் விதை தொகுப்பு 20 ஆயிரம் பேருக்கும் பப்பாளி, கொய்யா, போன்ற பழ செடிகள் 11,750 பேருக்கும் 100% மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்கு tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
மயிலாடுதுறை: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

மயிலை மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.இந்த <