News November 12, 2024

நெல் பயிர் காப்பீடு நவம்பர் 15 கடைசி நாள்

image

ஈரோடு மாவட்டத்தில், சம்பா (ரபி) பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், 1 ஏக்கருக்கு ரூ.573 செலுத்தி எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பயன்பெறலாம். எனவே விவசாயிகள் ஆவணங்களுடன் அரசு பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், நவம்பர் 15க்குள் பயிர் காப்பீட்டு செய்யலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 19, 2024

சென்னிமலை அருகே ஏழு பேர் கைது

image

சென்னிமலை சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சென்னிமலை அடுத்த முருகன் கோவில் பாறை என்ற இடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கார்த்தி, அருணாச்சலம், சந்தோஷ் குமார், பரமசிவம் குருசாமி ஆகியோர் பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்தனர். 

News November 19, 2024

சென்னிமலையில் முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு மரியாதை

image

முன்னாள் இந்திய பிரதமர்  இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னிமலை வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர தலைவர் S.செந்தில், M. சாதிக் பாட்ஷா மாவட்ட துணை தலைவர், வேலுசாமி மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி ப பங்கேற்றனர். 

News November 19, 2024

ஈரோடு கலெக்டரிடம் நேரில் சந்தித்து எம்எல்ஏ மனு

image

பெருந்துறையில் அமைந்துள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 40 கோடி செலவில் புதிதாக அமைய உள்ள தீவிர சிகிச்சை பிரிவு கட்டட பணியை விரைந்து முடிக்குமாறு பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். சந்திப்பின்போது மாவட்ட பொருளாளர் மணி பங்கேற்றார்.