News March 21, 2024
நெல்லை: வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் நேற்று (மார்ச் 20) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று யாரும் வந்து மனு தாக்கல் செய்யவில்லை, போலீசாரின் சோதனை மட்டுமே நடைபெற்றது.
Similar News
News September 15, 2025
நெல்லையில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள்

# இன்று காலை பத்து முப்பது மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
# திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளிலும் இன்று காலை 10 மணி முதல்பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது.
# அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி காலை 9 மணி முதல் நடக்கிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE….
News September 15, 2025
முஸ்லிம் லீக் மாநாட்டில் விருது வழங்கி கௌரவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் எழுச்சி மாநாடு மேலப்பாளையம் ஜின்னா தியேட்டரில் இன்று நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன், தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு முஸ்லிம் லீக் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
News September 14, 2025
ஜிஎஸ்டி வரி சீரமைப்பு கருத்தரங்கில் நயினார்

ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்திய ‘வளர்ந்து வரும் பாரதத்திற்கான ஜிஎஸ்டி வரி சீரமைப்பு’ எனும் கருத்தரங்கு இன்று (செப்டம்பர் 14) சென்னையில் நடந்தது. இதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பங்கேற்றார். பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.