News September 12, 2024
நெல்லை வந்த 1319 மெட்ரிக் டன் யூரியா

நெல்லை கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு இன்று(செப்.12) சரக்கு ரயில் மூலம் மொத்தம் 1.319 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்து இரங்கியது. தென்காசிக்கு 540 மெட்ரிக் டன் உரமும், நெல்லைக்கு 216.900 மெட்ரிக் டன் உரமும், தூத்துக்குடிக்கு 450 மெட்ரிக் டன் உரமும், குமரிக்கு 112.500 மெட்ரிக் டன் உரமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News October 17, 2025
நெல்லை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கான அக்டோபர் மாத குறைதீர்க்கும் கூட்ட நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் நடைபெற உள்ளது. காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும். அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிப்பார்கள். எனவே அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
நெல்லை மாநகர் பகுதியில் மீண்டும் கனமழை

நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இன்று காலையும் பல இடங்களில் மழை நீடித்து நிலையில் இன்று மழை பொழிவு இல்லை. பகல் முழுவதும் மழை ஓய்ந்த நிலையில் நேற்று மாலை வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மற்றும் கொக்கரக்குளம் போன்ற இடங்களில் மீண்டும் பலத்த மழை பெய்துள்ளது.
News October 16, 2025
நெல்லை கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

நெல்லை கோட்டாட்சியராக கண்ணா கருப்பையா பணியாற்றி வந்த நிலையில் அவர் அரியலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து நெல்லைக்கு புதிய கோட்டாட்சியராக சென்னை சிப்காட்டில் சிறப்பு துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பிரியா என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.