News March 28, 2025
நெல்லை மெட்ரோ திட்டத்திற்கு உகந்தது அல்ல

சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட, சிறப்பு முயற்சிகள் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திருநெல்வேலி நகரம் உகந்ததாக இல்லை என, சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News July 7, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஜூலை 06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News July 6, 2025
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்துக்கு மெகா பிளான்

நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் மாநகர கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேரோட்ட பாதுகாப்பு பணிக்காக பிரத்யேகமாக 3 ட்ரோன்கள், CCTV உட்பட 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் இன்று அறிவித்துள்ளது. *ஷேர்
News July 6, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஜூலை 06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் தர்ஷிஐஆ இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.