News October 25, 2024
நெல்லை மின்வாரியத்தினர் முக்கிய வேண்டுகோள்

நெல்லை மின்வாரியத்தினர் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், சூறைக்காற்று, இடி, மின்னல், மழை, நேரங்களில் மின்பாதைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்சாதனங்கள், மரங்கள், அருகிலேயோ அல்லது கீழேயோ நிற்க வேண்டாம். இல்லங்களிலும், அலுவலங்களிலும், மின் பாதுகாப்பு சாதனம்(RCD) அமைத்து நமது குடும்ப உறவுகளின் உயிர்களை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 18, 2025
சிஐடியு மாநில தலைவர் நெல்லை வருகை

சி ஐ டி யு மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சௌந்தர்ராஜன் நாளை (செப்.18) நெல்லைக்கு வருகை தருகிறார். வண்ணார்பேட்டையில் அரசு போக்குவரத்து கழகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 நாட்களாக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை சிஐடியு அரசு போக்குவரத்து நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
News September 18, 2025
நெல்லை: பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பூவன்குளம் அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து அங்கு சென்ற நிலையில் தீ மேலும் பரவியதால் கூடுதலாக சேரன்மாதேவி, பாளையங்கோட்டை மற்றும் தென்காசி தீயணைப்பு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
News September 18, 2025
நெல்லை: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <