News April 28, 2025
நெல்லை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகரில் இரவு நேரத்தில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகர காவல் துறை இரவு நேரத்தில் உதவி ஆணையர்கள் தலைமையில் இரவு நேரத்தில் ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளது. திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி சந்திப்பு பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலங்கள் வாரியாக காவல் ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.
Similar News
News April 29, 2025
நெல்லை: தலை நசுங்கி வாலிபர் பலி

திசையன்விளையை சேர்ந்த செந்தில் முருகனின் மகன் சந்தோஷ்(14). பரப்பாடியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு சந்தோஷ் பைக்கில் பரப்பாடியில் இருந்து நாங்குநேரி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பைக்கில் மோதி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த பேருந்தின் சக்கரமானது சந்தோஷ் தலை மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விஜயநாராயணம் போலீசார் விசாரணை.
News April 28, 2025
நெல்லை: உயிரழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த கார் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்.27) மாலை கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்.28) அறிவித்துள்ளார்.
News April 28, 2025
மாற்றுப் பணியில் சென்று ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் விடுத்துள்ள சுற்றறிக்கைபடி, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆம் கல்வியாண்டு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாற்று பணி மூலம் பணிபுரிய உத்தரவு பெற்று சென்ற அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் மீண்டும் சேர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.