News May 8, 2025
நெல்லை மாவட்டத்தில் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி

நெல்லையில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், நெல்லை மாவட்டம் தமிழக அளவில் 16ஆம் இடத்தை பெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 187 பள்ளிகள் உள்ளன. இதில் 4 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 68 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 5745 பேரில் 5318 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Similar News
News December 10, 2025
நெல்லையில் இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்த சேர்ந்த குத்தாலம் என்பவரின் மகன் பூர்ண ஆனந்த்(31) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி நேற்று போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை சிறையில் அடைத்தனர்.
News December 10, 2025
நெல்லை மக்கள் கவனத்திற்கு..!

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (டிச 10) நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெறும் என ஆணையர் மோணிகா ரானா நேற்று அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் வார்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் மாமன்ற உறுப்பினர்களிடம் முறையிடலாம் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
நெல்லையில் நாளை பகுதி சபா கூட்டம் அறிவிப்பு

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாளை நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெறும் என ஆணையர் மோணிகா ரானா இன்று அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் வார்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் மாமன்ற உறுப்பினர்களிடம் முறையிடலாம் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.


