News October 27, 2024
நெல்லை மாவட்டத்தில் 173 மில்லி மீட்டர் மழை பதிவு
இன்று(அக்.27) காலை 6 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் 173.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாலு முக்கு பகுதியில் 34 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஊத்து 30, காக்காச்சி 27, பாபநாசம் 13, சேர்வலாறு அணை 11, கொடுமுடி ஆறு அணை 19, மாஞ்சோலை 19, சேரன்மகாதேவி 5, சேர்வலாறு அணை 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
மக்கள் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் – ஆட்சியர்
நெல்லையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ளபெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் மழையின் அளவை பொறுத்து ஆற்றில் வரும் நீர் வரத்து கூடவோ, குறையவோ செய்யலாம். நீரின் வேகமும் அதிகமாக இருக்கலாம். பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆறில் இறங்க வேண்டாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் கூறியுள்ளார்.
News November 20, 2024
நெல்லையில் 95 மிமீ மழை பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி வரை 95 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 20 மில்லி மீட்டரும் அதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் 16 மில்லி மீட்டரும் அம்பாசமுத்திரத்தில் 14 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 11 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
News November 20, 2024
நெல்லை மாவட்ட நிர்வாகத்துடன் செயல்பட வாய்ப்பு
பேரிடர் காலங்களில் சமூகத்தை பாதுகாக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைதள பொறுப்பாளர்கள் படத்தில் காட்டப்பட்டுள்ள QR ஸ்கேன் மூலம் இணைந்து மாவட்ட நிர்வாகத்துடன் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பெற்று செயல்படலாம் என தெரிவித்துள்ளனர்.